உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனத்துறை கட்டுப்பாட்டில் கண்ணகி கோயில் விழா

வனத்துறை கட்டுப்பாட்டில் கண்ணகி கோயில் விழா

கூடலூர்: ‘ கண்ணகி கோயில் புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ளதால், வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இரு மாநில பக்தர்கள் சி த்ராபவுர்ணமியை கொண்டாட வேண்டும்,’ என தேக்கடியில் நடந்த தேனி இடுக்கி கலெக்டர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் யாருக்குச் சொந்தம் என இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை பல  ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று, இரு மாநிலத்தில் இருந்து பக்தர்கள் அதிகம் சென்று வழிபட்டு வரு கின்றனர். ஏப்.,22ல் கண்ணகி கோயிலில் சித்ராபவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டம்: இதற்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று தேக்கடி ராஜிவ் காந்தி அறிவியல் மையத்தில் தேனி கலெக்டர் வெங்கடாச்சலம்,  இடுக்கி கலெக்டர் கவுசிகன் தலைமையில் நடந்தது. தேனி எஸ்.பி.,மகேஷ், மேகமலை வன உயிரின காப்பாளர் சொர்ணப்பன், மங்கலதேவி  கண்ணகி அறக்கட்டளை தலைவர் தமிழாதன், செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன், கூடலூர் நகராட்சி கமிஷனர் ராஜேந்திரன், கேரள  அரசு சார்பில் எஸ்.பி.,ஜோசப், சப்கலெக்டர் ரெட்டி, தேக்கடி உதவி வன இயக்குனர் ஜான்மேத்யூ உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து  கொண்டனர்.

முடிவுகள்: பாலிதீன் முழுமையாக தடை செய்வது, 14 இடங்களில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்வது, அதிகாலை 5 மணியில் இருந்து மாலை 3 மணி  வரை பக்தர்கள் குமுளியில் உள்ள செக்போஸ்டில் அனுமதிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்லும் ஜீப் புகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்க குமுளியில் 6 இடங்களில் கவுன்டர் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இருந்து தமிழக வனப்பகுதியான பளி யன்குடி பாதை சீரமைத்து பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படும். குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதை சீரமைக்கப்படும்.  கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி புலிகள் சரணாலயமாக இருப்பதால், கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் விழா கொண்டாட ÷வண்டும் என முடிவு செய்யப்பட்டது. தமிழக அறக்கட்டளையினர் சார்பில் முடி காணிக்கை செலுத்த அனுமதி கேட்டனர். ஆனால், வனவிலங்குகள்  நடமாடும் பகுதியாக இருப்பதாகக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது. கண்ணகி அறக்கட்டளை சார்பில் மூன்று நாள் திருவிழா கொண்டாட அனுமதி ÷ கட்கப்பட்டது. ஆனால் ஒரு நாள் மட்டுமே விழாவுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும் என கேரள வனத்துறை தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !