உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள்!

சிறப்பு அலங்காரத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள்!

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.   அமாவாசை மற்றும் ராமபிரான் அவதரித்த ராமநவமியை முன்னிட்டு இன்று காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்,  7:30 மணிக்கு நித்தியபடி பூஜை, 8:00 மணிக்கு  மூலவர் பெருமாள் ராமன் லட்சுமண, பரத சத்ருகன் அனுமன் சீதா சமேத பட்டாபிராமனாக சிறப்பு  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பகல்  12:30 மணிக்கு உச்சி கால பூஜையும், மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9:00 மணிக்கு ஏகாந்த  சேவையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !