உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யுகாதி பண்டிகை: திருப்பதிக்கு 2 டன் பூக்கள்

யுகாதி பண்டிகை: திருப்பதிக்கு 2 டன் பூக்கள்

சேலம்: சேலம் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா சார்பில், யுகாதி பண்டிகைக்காக, திருப்பதிக்கு, இரண்டு டன் பூக்கள் மாலையாக தொடுக்கப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டது. திருப்பதியில், யுகாதி எனும் தெலுங்கு வருடப்பிறப்பு, ஏப்., 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக, சேலத்தில் உள்ள, திருமலை திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், பூக்கள் தொடுக்கும் விழா, சேலம் டி.ஆர்.எஸ்., திருமண மண்டபத்தில் நடந்தது. அங்கு சாமந்தி, சம்பங்கி, அரளி உள்ளிட்ட பல்வேறு வாசனைமிக்க மலர்கள், பக்தர்களிடம் சேகரிக்கப்பட்டன. அவற்றை, 100க்கும் மேற்பட்ட பெண்கள், மாலைகளாக தொடுத்து கொடுத்தனர். இரண்டு டன் எடையுள்ள பூக்கள், லாரிகள் மூலம், திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !