உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரிமலை சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் உண்டியல்கள் திறப்பு!

சதுரகிரிமலை சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் உண்டியல்கள் திறப்பு!

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் கடந்த இரு நாட்களாக நடந்த உண்டியல் திறப்பில்,பக்தர்கள் காணிக்கையாக ரூ. 20 லட்சம் வசூலானது.இங்குள்ள சுந்தரமகாலிங்க சுவாமி, சந்தனமகாலிங்கசுவாமி கோயில்களில் ஆண்டுக்கு 4 முறை உண்டியல்கள் திறக்கப்படுவது வழக்கம். தை அமாவாசை, மகாசிவராத்திரி திருவிழா முடிந்த பிறகு 3 வது திறப்பு நடைபெறும். அதன்படி கடந்த இருநாட்களாக மலையில் 3வது உண்டியல் திறப்பு நடந்தது. மதுரை அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, தக்கார் அனிதா, கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி, ஆய்வாளர் முருகையா முன்னிலையில் பணியாளர்கள் உண்டியலை திறந்து எண்ணிக்கையில் ஈடுபட்டனர். இதில் சந்தனமகாலிங்கசுவாமி கோயிலில் ரூ.2.45 லட்சம், சுந்தரமகாலிங்கசுவாமி கோயிலில் ரூ. 17.55 லட்சம், 8 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி வசூலானது. சாக்குகளில் மூடையாக கட்டப்பட்டு சுமைதுாக்கும் தொழிலாளர்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அடிவாரம் கொண்டுவரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !