திருக்கோஷ்டியூரில் சித்திரைத்தேர் உற்சவம் ஏப்.,14ல் துவக்கம்
ADDED :3519 days ago
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் சித்திரைத் தேர் உற்சவம் ஏப்.,14ல் துவங்குகிறது. இக்கோயிலில் சித்திரைத் தேர் உற்சவம் 11 நாட்கள் நடைபெறும். உற்சவ துவக்க விழாவை முன்னிட்டு ஏப்.,12ல் இரவு 7மணிக்கு திருமுனை நகர சோதனை ஆகிய பூர்வாங்கப் பணிகள் நடைபெறும். மறுநாள் காலை 7.10 மணிக்குள் பெருமாள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளலும், பகல் 11.05 மணிக்குகொடியேற்றமும் , இரவில் காப்புக்கட்டுதலுடன் உற்சவம் துவங்கும். தொடர்ந்து தினசரி காலை மற்றும் இரவில் சுவாமி வாகனங்களில் புறப்பாடு நடைபெறும்.ஏப்.,18ல் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல்,ஏப்.,22ல் திருத்தேரும்,ஏப்.,24ல் புஷ்ப பல்லக்கு நடைபெறும்.