உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவில் பிரம்மோற்சவம்

ஆஞ்சநேயர் கோவில் பிரம்மோற்சவம்

ஆரணி: ஆரணி கோதண்டராமர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. ஆரணி டவுன் கொசப்பாளையம் சுப்பிரமணிய சாஸ்திரியார் தெருவில், கோதண்டராமர் வீர ஆஞ்சநேயர் சுவாமி கோவில், 9ம் ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தையொட்டி, நேற்று அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. பின்னர் முக்கிய வீதி வழியாக அன்ன வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவ விழாவையொட்டி, தினசரி காலை, 7 மணி மற்றும் இரவு, 7 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி சுவாமிகள் திருவீதி உலா நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான, 14ம் தேதி சூரிய குளத்தில் தெப்பல் உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டினை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கேசவ நாராயணன், செயல் அலுவலர் சசிகலா செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !