மலைப்பட்டி காளியம்மன், பைரவர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :3519 days ago
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி காளியம்மன், பைரவர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவின் முதல்நாள் காலையில் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாவாசனம், மகா கணபதி பூஜை, லட்சுமி ஹோமம், தீர்த்தம் கொண்டு வருதல், வாஸ்து பூஜை நடந்தது. மாலையில் மகா சங்கல்பம், அங்குரார்பணம், ரக்ஷா பந்தனம், கலாகர்ஷணம், கடஸ்தாபனம், சூர்ய பூஜை, துவார பூஜை, வேதிகார்ச்சனை, வேதமந்திர பாராயணம் நடந்து விழாவின் இராண்டாவது காலை வேதமந்திர பாராயணம், ஸ்பர்ஷாஹூதி, நாடி சந்தானம், மூல மந்திர ஹோமம், நடந்தது .தொடர்ந்து விமானம், மூலவருக்குகும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.