செல்லியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :3519 days ago
திருப்பாச்சூர்: திருவள்ளூர் அடுத்துள்ள, பழைய திருப்பாச்சூரில் உள்ளது மகாசக்தி செல்லியம்மன் கோவில். இந்த கோவிலில், மூன்றாம் ஆண்டு தீமிதி திருவிழா, வரும் 10ம் தேதி துவங்குகிறது. அன்று, அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும், பால்குட ஊர்வலமும் நடைபெறும். தொடர்ந்து, 11, 12 ஆகிய தேதிகளில், அம்மனுக்கு வர்ணிப்பு மாலையும், 13ம் தேதி காலை 9:00 மணிக்கு, அபிஷேகமும், பகல் 12:00 மணிக்கு, கூழ்வார்த்தலும் நடைபெறும். பின், 14ம் தேதி, காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும்.மாலை 6:00 மணிக்கு, தீமிதி திருவிழாவும், அதை தொடர்ந்து, அம்மன் மலர் அலங்காரத்தில் வீதி உலாவும் நடைபெறும்.