காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
ADDED :3519 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி உப்புச் செட்டியார் தெரு காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது. பெண்கள் பூத்தட்டு எடுத்து காளியம்மன் கோயிலுக்கு வந்தனர்.அங்கு அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது.இரவு பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. .முக்கிய நிகழ்ச்சியாக, ஏப்.,12ல் பக்தர்கள் பால்குடம்,முளைப்பாரி,தீச்சட்டி எடுத்தல்,பெண்கள் மாவிளக்கு வழிபாடு,13 ல் கோயில் பொங்கல் வைத்தல்,14 ல் அம்மன் கரகம், பூஞ்சோலை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.