சங்ககிரி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :3519 days ago
சங்ககிரி: சங்ககிரி, கோட்டை தெருவில் அலகுமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவில் திருவிழா, மார்ச், 30ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதை ஒட்டி, தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம், அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்தியும், பூங்கரகம், காளி வேடம் அணிந்தும், சங்ககிரி முக்கிய வீதிகள் வழியாக, பக்தர்கள் ஊர்வலமாக சென்று, சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று, கிடா வெட்டி பொங்கல் வைத்து, பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.