உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யுகாதி பண்டிகையை முன்னிட்டு பெருமாள் கோயிலில் முஸ்லிம் மதத்தினர் வழிபாடு!

யுகாதி பண்டிகையை முன்னிட்டு பெருமாள் கோயிலில் முஸ்லிம் மதத்தினர் வழிபாடு!

கடப்பா: தெலுங்குப்புத்தாண்டு தினமான யுகாதிப்பண்டிகையை முன்னிட்டு இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள லட்சுமி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் பெருமாளை தரிசனம் செய்து விட்டு சடாரி, தீர்த்தம் மற்றும் யுகாதி பச்சடி பிரசாதம் பெற்றனர்.

இவர்கள் பெருமாளை தங்களது மருமகனாக (பீபீ நாச்சியாரின் கணவர்) கருதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் யுகாதிப் பண்டிகையன்று இஸ்லாம் மதத்தினர் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பு. கடவுள் ஒருவரே: மனிதர்கள் தான் கடவுளை பிரித்துப் பார்க்கின்றனர்.கடவுளின் முன்பு அனைவரும் சமம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக இருக்கிறது. பெருமாள் கோயிலில் முஸ்லிம்கள் வழிபாடு செய்வது, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !