சித்திரை மாத விஷூ விழாவுக்காக சபரிமலை நடை திறந்தது
சபரிமலை: சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ விழாவுக்காக சபரிமலை நடை மார்ச்.,10 மாலை திறந்தது.
மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு எந்த பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்யதரிசனம் மற்றும் அபிஷேகங்களுக்கு பின்னர் நெய்யபிஷேகம் தொடங்கும். தொடர்ந்து கணபதிஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, உதயாஸ்தமன பூஜை, மாலையில் தீபாரதனை, இரவு புஷ்பாபிஷேகம், படிபூஜை, அத்தாபூஜை ஆகியவை நடக்கிறது, இந்த பூஜைகள் அனைத்தும் வரும் 18-ம் தேதி வரை எல்லா நாட்களிலும் நடைபெறும்.14-ம் தேதி அதிகாலையில் ஐயப்பன் விக்ரகம் முன்பு காய்,கனிகள் வைக்கப்பட்டு விஷூகனி தரிசனம் நடைபெறும், தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார். 18-ம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.