உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெ.நா.பாளையம் காட்டு மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

பெ.நா.பாளையம் காட்டு மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே எண்.4 வீரபாண்டி யில் உள்ள காட்டு மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது.

பிள்ளையார் சாட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பூ குண்டம் சாட்டுதல், அக்னி கம்பம் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. அக்னிகுண்டம் திறத்தல், சக்தி கரகம் அழைத்தல், சக்தி கரகம் திருக்கோவிலை வந்தடைதல், அக்னி குண்டம் இறங்குதல் உள்ளிட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, அக்னி கும்பம் எடுத்தல், மாவிளக்கு, அலகு குத்தி தேர் இழுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மஞ்சள் நீர்விழா, வசந்த விழாவுடன் கோவில் குண்டம் திருவிழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !