உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல்லில் வினோத திருவிழா; துடைப்பம் காணிக்கை; குழந்தைகள் ஏலம்

திண்டுக்கல்லில் வினோத திருவிழா; துடைப்பம் காணிக்கை; குழந்தைகள் ஏலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் புனித தோமையார் சர்ச் திருவிழாவில் நேற்று துடைப்பம், புளி மூட்டைகள் காணிக்கையாக செலுத்தப்பட்டன. திண்டுக்கல், தோமையார்புரத்தில் புனித தோமையார் சர்ச் உள்ளது. 1891ல், சர்ச் உருவானது.

அன்றிலிருந்து இன்று வரை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் அருள் பெற்று செல்கின்றனர். இந்த சர்ச திருவிழா ஏப்., 8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு குணமளிக்கும் வேண்டுதல் திருப்பலி நடந்தது. பின், ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. தோல் வியாதி, பருக்கள், குழந்தை இல்லாமை உள்ளிட்ட பிரச்னைகளில் தவிக்கும் மக்கள் துடைப்பம், கல் உப்பு, மிளகு, பொட்டுக்கடலை உள்ளிட்டவற்றை தோமையாருக்கு படையலாக வைத்தனர். சிலர் புளி மூட்டைகளை நேர்த்திக்கடனாக செலுத்தினர். நேர்த்திக்கடனுக்காக, குழந்தைகள் ஏலம் விடப்பட்டன. ஆண் குழந்தை, 500 ரூபாய்க்கும், பெண் குழந்தையை, 300 ரூபாய்க்கும் பெற்றோரே ஏலம் எடுத்தனர். தீய சக்திகள் குழந்தைகளை அண்டக்கூடாது என்பதற்காக, குழந்தை ஏலம் எடுக்கும் சடங்கு நடத்தப்படுகிறது என்று, பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !