உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தாண்டு பிறப்பது எப்போது!

புத்தாண்டு பிறப்பது எப்போது!

சித்திரை 1ல் (ஏப்.14) பிறக்க வேண்டிய துர்முகி ஆண்டு, இம்முறை பங்குனி 31 (ஏப்.13) மாலை 6.30 மணிக்கு பிறக்கிறது. இருப்பினும், அன்று இரவு  பழங்கள், மஞ்சள் நிறமுள்ள கொன்றை, செவ்வந்தி பூக்கள், நகைகள் ஆகியவற்றை ஒரு தாம்பாளத்தில் வைத்து, பூஜையறையில்  வைக்க வேண்டும். மறுநாள் காலை 5.00 மணிக்கு வீட்டிலுள்ள ஒரு பெரியவர்  இதைப் பார்த்து விட்டு நீராட வேண்டும். பின் மற்றவர்களின் கண்களைப் பொத்தி அழைத்து வந்து இதைப் பார்க்கச் செய்ய வேண்டும். பிறகு எல்லாரும் நீராடிய பின், இந்த ஆண்டிற்குரிய தெய்வமான ரங்கநாதருக்கும், நவக்கிரக சுக்கிர தலமான கஞ்சனுõர் ”க்கிரபுரீஸ்வரருக்கும் (தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவில் அருகிலுள்ளது) பூஜை செய்தால்  ஆண்டு முழுவதும் இனிமையாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !