உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுக்கிர திசை அடிச்சாச்சு!

சுக்கிர திசை அடிச்சாச்சு!

துர்முகி ஆண்டின் ராஜாவாக சுக்கிரன் விளங்குகிறார். அவரை இந்த போற்றியைப் பாடி வணங்குவதன் மூலம் நிறைந்த செல்வ வளம் பெறலாம்.

ஓம் அசுர குருவே போற்றி
ஓம் அரியசக்தி வாய்த்தவனே போற்றி
ஓம் அழகனே போற்றி
ஓம் அரங்கத்தருள்பவனே போற்றி
ஓம் அந்தணனே போற்றி
ஓம் அத்தி சமித்தனே போற்றி
ஓம் அவுணரமைச்சனே போற்றி
ஓம் அந்தகனுக்குதவியவனே போற்றி
ஓம் ஆறாம் கிரகனே போற்றி
ஓம் ஆச்சாரியனே போற்றி
ஓம் இருகரனே போற்றி
ஓம் இனிப்புச் சுவையனே போற்றி
ஓம் இந்திரியமானவனே போற்றி
ஓம் இல்லறக்காவலே போற்றி
ஓம் இரு பிறையுளானே போற்றி
ஓம் ஈர்க்கும் மீனே போற்றி
ஓம் உல்லாசனே போற்றி
ஓம் உற்றோர்க் காவலே போற்றி
ஓம் ஒரு கண்ணனே போற்றி
ஓம் ஒளி மிக்கவனே போற்றி
ஓம் கசன் குருவே போற்றி
ஓம் கவுரவம் தருபவனே போற்றி
ஓம் கலை நாயகனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் கமண்டலதாரியே போற்றி
ஓம் களத்ர காரகனே போற்றி
ஓம் கயமுகன் தந்தையே போற்றி
ஓம் காவியனே போற்றி
ஓம் கனகம் ஈவோனே போற்றி
ஓம் கீழ் திசையனே போற்றி
ஓம் கிரக அதிபனே போற்றி
ஓம் சடை முடியனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி
ஓம் சரித்திரம் படைத்தாய் போற்றி
ஓம் சத்ரு நாசகனே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவன் உதரத்தில் இருந்தவனே போற்றி
ஓம் சுகம் தருபவனே போற்றி
ஓம் சுக்கிர திசை அதிபதியே போற்றி
ஓம் சுக்கிர நீதி அருளியவனே போற்றி
ஓம் சுரர் பகைவனே போற்றி
ஓம் சுக்கிராச்சாரியனே போற்றி
ஓம் செழிப்பிப்பவனே போற்றி
ஓம் தவயோகனே போற்றி
ஓம் ததீசியை உயிர்ப்பித்தவனே போற்றி
ஓம் திங்கள் பகையே போற்றி
ஓம் திருவெள்ளியங்குடி தேவனே போற்றி
ஓம் துலாம் ராசி அதிபதியே போற்றி
ஓம் திருநாவலுõரில் அருள்பவனே போற்றி
ஓம் தேவயானி தந்தையே போற்றி
ஓம் துõமகேதுக்கு அருளியவனே போற்றி
ஓம் நாடப்படுபவனே போற்றி
ஓம் நாடளிப்பவனே போற்றி
ஓம் நாற்கரனே போற்றி
ஓம் நீண்ட தசாகாலனே போற்றி
ஓம் நுண்கலைத் தேவனே போற்றி
ஓம் நெடியவனே போற்றி
ஓம் பரணி நாதனே போற்றி
ஓம் பல்பிறவி எடுத்தவனே போற்றி
ஓம் பத்துபரி தேரனே போற்றி
ஓம் பஞ்சகோணப் பீடனே போற்றி
ஓம் பிரகாசிப்பவனே போற்றி
ஓம் பிருகு குமாரனே போற்றி
ஒம் பின்னும் சுழல்வோனே போற்றி
ஓம் பிள்ளை நான்குடையவனே போற்றி
ஓம் புதன் மித்ரனே போற்றி
ஓம் புகழளிப்பவனே போற்றி
ஓம் புதனருகில் இருப்பவனே போற்றி
ஓம் பூமியன்ன கோளே போற்றி
ஓம் பூரத்து அதிபதியே போற்றி
ஓம் பூராட நாதனே போற்றி
ஓம் பெண்பால் கிரகமே போற்றி
ஓம் பேராற்றலானே போற்றி
ஓம் மழைக் கோளே போற்றி
ஓம் மழலை தருபவனே போற்றி
ஓம் மரவுரி ஆடையனே போற்றி
ஓம் மாமேதையே போற்றி
ஓம் மாண்டு மீண்டவனே போற்றி
ஓம் மாய்ந்தவரை மீட்பவனே போற்றி
ஓம் மாபலியின் குருவே போற்றி
ஓம் மாலோடு இணைந்தவனே போற்றி
ஓம் மீனத்தில் உச்சனே போற்றி
ஓம் மிருத்யு நாசகனே போற்றி
ஓம் மூன்றடி தரிசித்தவனே போற்றி
ஓம் மோகனனே போற்றி
ஓம் மொச்சை பிரியனே போற்றி
ஓம் யயாதி மாமனே போற்றி
ஓம் யம பயம் அழிப்பவனே போற்றி
ஓம் ரவிப் பகைவனே போற்றி
ஓம் ரிஷபராசி அதிபதியே போற்றி
ஓம் வண்டானவனே போற்றி
ஓம் வரத ஹஸ்தனே போற்றி
ஓம் வள்ளி அதிதேவதையனே போற்றி
ஓம் வாமனரை கண்டவனே போற்றி
ஓம் விடிவெள்ளியே போற்றி
ஓம் விபுதைப் பிரியனே போற்றி
ஓம் வெண்ணிறனே போற்றி
ஓம் வெள்ளி உலோகனே போற்றி
ஓம் வெண் குடையனே போற்றி
ஓம் வெள்ளாடையனே போற்றி
ஓம் வெண் கொடியனே போற்றி
ஓம் வெள்ளித் தேரனே போற்றி
ஓம் வெண் தாமரைப் பிரியனே போற்றி
ஓம் வைரம் விரும்பியே போற்றி
ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் வெள்ளி நாயகனே போற்றி போற்றி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !