உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கனுார் காளியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்

திருக்கனுார் காளியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்

திருக்கனுார்: செட்டிப்பட்டு, காளியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம், வரும் 21ம் தேதி
நடக்கிறது.

திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், 7ம் ஆண்டு பவுர்ணமி விழா மற்றும் பால்குட அபிஷேகம், வரும் 21ம் தேதி
நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு, சங்கராபரணி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகத்துடன், 108 பால் குடங்கள் எடுத்து வரப்பட்டு, காலை 9:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை 11:00 மணிக்கு, சந்தன காப்பு அலங்காரமும், மதியம் 1:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4:00 மணிக்கு ஊர்கூடி ஊரணி பொங்கல் வைத்து, மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !