புதுச்சேரி வீரபத்திரசுவாமி கும்பாபிஷேக திருப்பணி துவக்கம்
ADDED :3499 days ago
புதுச்சேரி: வீரபத்திர சுவாமி சவுடாம்பிகை அம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி நாளை 13 ம்தேதி துவங்குகிறது.
லாஸ்பேட்டை வீரபத்திரசுவாமி சவுடாம்பிகை அம்மன் கோவிலில் கும்பாஷேக திருப்பணி
ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூஜைகள் நாளை 13 ம்தேதி காலை 9 மணிக்கு துவங்குகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், சதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது. கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுல ராஜா சாஸ்திரிகள் யாகத்தை நடத்தி வைக்கிறார். ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு, திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.