உடுமலை அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
உடுமலை: உடுமலை காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி மற்றும் திருக்கல்யாண
திருவிழா, இன்று நோன்பு சாட்டுதலுடன் துவங்கி, ஏப்., 22ம் தேதி வரை நடக்கிறது.
நேருவீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழாவுக்கான நோன்பு
சாட்டுதல் இன்றிரவு, 7:00 மணிக்கு நடக்கிறது. ஏப்., 19ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, கணபதி
ேஹாமமும், காலை, 9:00 மணிக்கு, முளைப்பாலிகையிடுதலை தொடர்ந்து, திருவிழா
கொடியேற்றப்படுகிறது. மாலை, 4:30 மணிக்கு, திருமூர்த்திமலையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, கும்பஸ்தாபிதம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, லலிதா சகஸ்ரநாம பாராயணமும், இரவு, 8:00 மணிக்கு, இன்னிசை பாட்டு மன்றமும் நடக்கிறது.
ஏப்., 20ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு
செல்லப்படுகிறது. மாலை, 4:30 மணிக்கு, காமாட்சியம்மனுக்கு மாவிளக்கு, பொங்கல் பூஜையும், இரவு, 8:00 மணிக்கு, இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 21ம் தேதி, காலை, 9:30 முதல் 11:00 மணிக்குள், ஏகாம்பரேஸ்வரருக்கும் காமாட்சியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
காலை, 11:30 மணிக்கு, மகா தீபாராதனையும், மாலை, 6:00 மணிக்கு, அம்மன் வீதியுலாவும், இரவு, 8:30 மணிக்கு, நடன நிகழ்ச்சியும் நடக்கின்றன. ஏப்., 22ம் தேதி, காலை, 10:00 மணிக்கு,
காமாட்சியம்மனுக்கு மகா அபிேஷகமும், மதியம், 12:00 மணிக்கு, அலங்கார, மகா தீபாராதனையும், மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், மஞ்சள் நீராட்டுதலுடன் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது; கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது.