ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோவிலில் உழவாரப் பணி
ADDED :3551 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோவிலில் உழவாரப் பணி நடைபெற்றது.
துாத்துக்குடி மாவட்டம் திருமத்திர நகரை சேர்ந்த சுமார் 60 மேற்பட்டோர் கோவில் உழவார
பணிகளை மேற்கொண்டனர். கோவில் சுற்றுசுவர் முதல் கருவரை உள்ள பகுதிகளை சுத்தம்
செய்தனர். உழவார பணிக் குழுவினருடன் ஆர்.எஸ்.மங்கலம் இந்து இளைஞர் பேரவையினர்
கலந்து கொண்டு திருப்பணியாற்றினர். உழவார பணி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர்
சந்திரசேகர், தேவிபட்டினத்தை சேர்ந்த சுபாஸ் சேதுபதி ஆகியோர் செய்திருந்தார்.