சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் கொடியேற்றம்
ADDED :3620 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி கொடிக்கம்பத்தில் கொடியேற்று விழா நடந்தது. இக்கோயிலில் வைகாசிதோறும் 17 நாட்கள் திருவிழா நடக்கும். நேத்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அறிவதற்காக பங்குனியில் கோயில் முன் அமைந்த திருபலிபீட கம்பத்தில் கொடியேற்று விழா நடக்கும். இவ்விழா நேற்று முன் தினம் இரவு நடந்தது.பக்தர்கள் பின்தொடர பூஜாரி கணேசன் கொடியுடன் ரத வீதி சுற்றி ஊர்வலம் வந்தனர். உபயதாரர் சார்பில் அம்மனுக்கு திருமஞ்சனம் சாற்றுதல் நடந்தது. பின் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா, தலைமை கணக்கர் பூபதி செய்திருந்தனர்.