முத்தாலவாழி மாரியம்மன் கோவில் செடல் பிரம்மோற்சவ விழா
ADDED :3503 days ago
வில்லியனுார்: வில்லியனுார் முத்தாலவாழி மாரியம்மன் கோவில் செடல் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. யாதவ நாயுடு மரபினர் சார்பில் நடந்த கொடியேற்று விழாவில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இரவு 7:30 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி மாட வீதியுலா நடந்தது. தொடர்ந்து 21ம் தேதி வரையில் வன்னியர், சிதம்பல யாதவர், விஸ்வகர்ம என ஒவ்வொரு மரபினர் சார்பில் விழா நடைபெறுகிறது. பொது உற்சவமாக வரும் 19ம் தேதி செடல் உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக்குழுவினர் மற்றும் நகரவாசிகள் செய்துவருகின்றனர்.