உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று ராம நவமி: தர்மம் காக்க வந்த புருஷோத்தமன்!

இன்று ராம நவமி: தர்மம் காக்க வந்த புருஷோத்தமன்!

அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சமூக நல்லிணக்க நாயகன் அறவோர்களையும் ஆன்றோர்களையும் காக்கும் மாவீரர் கொடுத்த வாக்கை காக்க அரச பதவி மறுத்து, வெறும் காலால் 14 ஆண்டுகள் நடந்து, இன்னல்கள் பல ஏற்ற தியாக ஸ்வரூபம். இன்று  ஸ்ரீ ராம அவதார தினம். இல்லந்தோறும்,  உள்ளந்தோறும் ராம பக்தி ஜோதி ஏற்றுவோம்.

ராமச்சந்திரனே! சூரிய குலத்தில் உதித்தவனே! அமிர்தமான ராம என்னும் திருநாமம் கொண்டவனே! அபயம் அளிப்பவனே! அகலிகையின் சாபம் தீர்த்தவனே! குளிர்ச்சி மிக்க நிலவு போல பிரகாசிப்பவனே! பிறவிக் கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வ வளம் தருவாயாக.

* ஜானகியின் பிரியனே! அனுமனுக்கு வாழ்வு அளித்தவனே! ஆதிமூலமானவனே! தாய் போல அன்பு மிக்கவனே! பயத்தைப் போக்குபவனே! இகபர சுகத்தை அருள்பவனே! சேது பாலம் அமைத்தவனே! ஏழு மரா மரங்களைத் துளைத்தவனே! லட்சுமணரின் சகோதரனே! ஏகபத்தினி விரதனே! எங்கள் இல்லங்களில் மங்களம் நிறைந்திருக்க அருள்வாயாக.

* காருண்ய மூர்த்தியே! ஜோதியாய் ஒளிர்பவனே! ராமஜெயம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! கோதண்டம் என்னும் வில்லை ஏந்தியவனே! கோசலையின் புதல்வனே! ரத்ன குண்டலம் அணிந்தவனே! மரவுரி தரித்தவனே! சபரிக்கு மோட்சம் அளித்தவனே! எங்கள் உள்ளத்தில் குடியிருக்க வருவாயாக.

* தசரதரின் வாக்கை காத்தவனே! சத்திய சீலனே! நேர்மை குணத்தவனே! மூவுலகுக்கும் அதிபதியே! சம்சார சாகரத்தில் இருந்து காப்பவனே! விபீஷணனால் பூஜிக்கப்பட்டவனே! ராவணனை வதம் செய்தவனே! அயோத்தியின் மன்னவனே! சக்கரவர்த்தி திருமகனே! சுக்ரீவனுக்கு வாழ்வு அளித்தவனே! தியாகராஜரால் போற்றப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.

* கல்யாண குணத்தவனே! ராஜலட்சணம் பொருந்தியவனே! வானரங்களின் தலைவனே! சங்கீதப் பிரியனே! ஜெகம் புகழும் புண்ணிய வரலாறு கொண்டவனே! மாருதியின் மனம் கவர்ந்தவனே! ரகு குல திலகனே! லவகுசர்களின் அன்புத் தந்தையே! விஜய ராகவனே! சீதையின் நாயகனே! எங்கள் வீடும், நாடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.

அகரத்தில் அமைந்த அனந்த ராமாயணம்!

அனந்தனே அசுரர்களை அழித்து
அன்பர்களுக்கு அருள அவனியில்
அயோத்தி அரசனாக அவதரித்தான்.
அப்போது அரிக்கு அரணாக அரனின் அம்சமாய்
அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.
அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த
அன்பளிப்பு அல்லவோ அனுமன்? அவனே
அறிவழகன், அன்பழகன், அன்பர்களை
அரவணைத்து அருளும் அருட்செல்வன்!

அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில்
அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்
அடக்கமும் அங்கங்களாக அமைந்த
அழகியை அடைந்தான். அரியணையில்
அமரும் அருகதை அண்ணனாகிய
அனந்தராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ!
அக்கைகேயி அசூயையால் அயோத்தி
அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக
அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள்.

அடவியிலும் அபாயம்! அரக்கர்களின்
அரசன், அன்னையின் அழகால் அறிவிழந்து
அபலையை அபகரித்தான் அத்தசமுகனின்
அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு
அளவேயில்லை, அயோத்தி அண்ணல்,
அன்னை அங்கிருந்து அகன்றதால் அடைந்த
அவதிக்கும் அளவில்லை. அத்தருணத்தில்
அனுமனும், அனைவரும் அரியை அடிபணிந்து,
அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.
அந்த அடியாருள் அருகதையுள்ள அன்பனை
அரசனாக அரியணையில் அமர்த்தினர். அடுத்து
அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்
அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர்.
அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக
அடியெடுத்து அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில், அரக்கிகள்
அயர்ந்திருக்க அன்னையை அடிபணிந்து
அண்ணலின் அடையாளமாகிய
அக்கணையாழியை அவளிடம் அளித்தான்
அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்
அநேகமாக அணைந்தன. அன்னையின்
அன்பையும் அருளாசியையும் அக்கணமே
அடைந்தான் அனுமன். அடுத்து,
அரக்கர்களை அலறடித்து, அவர்களின்
அரண்களை, அகந்தைகளை அடியொடு
அக்னியால் அழித்த அனுமனின்
அட்டகாசம், அசாத்தியமான அதிசாகசம்.

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை
அடக்கி, அதிசயமான அணையை அமைத்து,
அக்கரையை அடைந்தான், அத்தசமுக
அரக்கனை அமரில் அயனின் அஸ்திரத்தால்
அழித்தான். அக்கினியில் அயராமல் அர்ப்பணித்த
அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை
அடைந்தாள். அன்னையுடன் அயோத்தியை
அடைந்து, அரியணையில் அமர்ந்து அருளினான்
அண்ணல். அனந்தராமனின் அவதார
அருங்கதை அகரத்திலேயே அடுக்கடுக்காக
அமைந்தது அனுமனின் அருளாலே.
அவன் அடி அர்ச்சிப்போம், அனைத்தையும்
அருளிடுவோன் அன்பரின் அகம் அறிந்தே!

அனுமன் சாலீஸா

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல
யச ஜோ தாயக பலசார் புத்தி ஹீன தனு ஜானி கே,
ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்

1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர
2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா
3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ
4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா
5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை
6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன
7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர
8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா
9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா
10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸவாரே
11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே
12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ
13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்
14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா
15. யம குபேர திகபால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே
16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா
17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா
18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ
19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்
20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே
21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே
22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா
23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை
24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை
25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா
26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை
27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா
28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை
29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா
30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே
31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ் வர தீன் ஜானகீ மாதா
32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா
33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை
34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ
35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ
36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா
37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ
38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ
39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா
40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா

பவன தனய ஸங்கட ஹரன்,
மங்கள மூரதி ரூப ராமலஷமன் ஸீதா
ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுரபூப.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !