உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ் புத்தாண்டு : பழநியில் குவிந்த பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருப்பு!

தமிழ் புத்தாண்டு : பழநியில் குவிந்த பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருப்பு!

பழநி:தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பழநிமலைக்கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள், 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பழநி மலைக்கோயில், திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், பட்டத்துவிநாயகர் கோயில்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்தனர்.பழநி மலைக்கோயில் படிப்பாதையில் திருமுருக பக்த சபா சார்பில் காலை 5 மணிக்கு படிபூஜை நடந்தது. பக்தர்கள் பால்குடங்கள், தீர்த்தக்காவடி எடுத்து வெளிப்பிரகாரத்தை வலம் வந்து நேர்த்திகடன் செலுத்தினர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர். பொதுதரிசனம் வழியில் வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசையில் 4 மணிநேரம் காத்திருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். மாலை சாயரட்சை பூஜை ராஜ அலங்காரம், இரவு 7 மணி தங்கரத புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !