அக்னி தீர்த்தத்தில் ராமநாதசுவாமி அருள்பாலிப்பு!
ADDED :3509 days ago
ராமேஸ்வரம்: தமிழ் புத்தாண்டான நேற்று, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அங்கு மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் அங்கு கூடியிருந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடினர். கோயிலுக்குள் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதியம் 12 மணிக்கு, கோயிலுக்குள் குருக்கள் பஞ்சாங்கம் வாசித்தனர். பின், சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கோயில் கண்காணிப்பாளர்கள் கக்காரின், ராஜாங்கம் உள்ளிட்ட பலர் தரிசனம் செய்தனர்.