உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் புத்தாண்டு தீர்த்தவாரி!

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் புத்தாண்டு தீர்த்தவாரி!

திருப்புத்துார்: தமிழ் புத்தாண்டையொட்டி பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் நேற்று காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தங்க கவசம் அணிந்த மூலவர், வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 10:30 மணிக்கு கற்பக விநாயகரின் பிரதிநிதியாக அங்குசத்தேவர், சிவபெருமானின் பிரதிநிதியாக சூலத்தேவரும் கோயில் திருக்குளக்கரையில் எழுந்தருளினர். தலைமைக் குருக்கள் பிச்சைசிவாச்சாரியார், சோமசுந்தரக் குருக்கள் அபிசேக, ஆராதனைகள் செய்தனர். பின்னர் அங்குசத்தேவர்,சூலத்தேவர் ஆகியோருடன் ஸ்ரீதர் குருக்கள் திருக்குளத்தில் மூழ்கி தீர்த்தவாரி நடத்தினர். இருதேவருக்கும் மஞ்சள் அஸ்திரம் அணிவித்து, சிறப்பு ஆராதனை நடந்தது.  விநாயகர் மற்றும் மரூதீசர் சன்னதி முன் ‘துர்முகி’ தமிழ்ப்புத்தாண்டின் பலன்கள் வாசிக்கப்பட்டது. மூஷிக வாகனத்தில் விநாயகர், ரிஷப வாகனத்தில் சந்திரசேகர கௌரி அம்பாள் எழுந்தருளினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !