ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா!
ADDED :3509 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி-திருநகரம் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் 96 ம் ஆண்டு பங்குனி பொங்கல் விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல் விழா ஏப்.5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடந்த விழாவில் அம்மன் பலவித அலங்காரத்தில் தினமும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். எட்டாம் நாள் விழாவான பொங்கல் பண்டிகையன்று பெண்கள் கோயில் முன்புறம் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஒன்பதாம் நாளான்று அக்கினிசட்டி, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று, இரவு 10 மணிக்கு, தேரோட்டம் நடந்தது விழா நாட்களில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பொருட்காட்சியும் நடந்து வருகிறது. ஏற்பாடுகளை உறவின்முறை தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.