உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகை ஆற்றில் இறங்கிய பாலகிருஷ்ண பெருமாள்!

வைகை ஆற்றில் இறங்கிய பாலகிருஷ்ண பெருமாள்!

திருப்புவனம்: சித்திரை திருவிழாவையொட்டி திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் நேற்று வைகை ஆற்றில் இறங்கினார். திருப்புவனம் பாலகிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 6 காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் இரவு 10 மணிக்கு முத்து பல்லக்கில் பாலகிருஷ்ண பெருமாள் வலம் வந்தார். நேற்று காலை 10 மணிக்கு வைகை ஆற்றில் பொன்னிற குதிரையில் இறங்கினார். காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் பெருமாளுக்கு ‘கோவிந்தா, கோவிந்தா ’ என, கோச மிட்டு தண்ணீரை பீய்ச்சியடித்து நேர்த்தி கடன் செலுத்தினர். முனியாண்டி கோயிலில் தங்கும் பாலகிருஷ்ண பெருமாள் இன்று இரவு கோயில் திரும்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !