உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கல்பட்டு மஹா பைரவர் ருத்ர கோயிலில் கும்பாபிஷேகம்!

செங்கல்பட்டு மஹா பைரவர் ருத்ர கோயிலில் கும்பாபிஷேகம்!

செங்கல்பட்டு: ஞான தக்ஷிணாமூர்த்தி த்யான பீடம் கும்பாபிஷேகம் 12.5.2016 வியாழக்கிழமை  9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள்ளாக சுக்ர ஹோரையில் ஞானம் தருகின்ற த்யான மண்டபத்தில் வீற்றிருக்கும் ஞான தக்ஷிணாமூர்த்திக்கும், பைரவ யாக மண்டபத்திற்கும் மஹா கும்பாபிஷேகம் எனும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவானது வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிநிரல்: 10.5.2016 (செவ்வாய்கிழமை)

காலை: 7.30 மணிக்கு-மங்கள வாத்தியம்
காலை: 8.00 மணிக்கு- விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், மஹா சங்கல்பம், மஹா கணபதி ஹோமம், மஹா லக்ஷ்மி ஹோமம், நவக்ரஹ ஹோமம், கோ பூஜை
காலை: 10.30 மணிக்கு- மஹா பூர்ணாஹூதி
காலை: 11.00 மணிக்கு- ஞான தக்ஷிணாமூர்த்தி த்யான மண்டபத்திற்கு பிருந்தா எனும் பெயர் சூட்டுதல் பைரவ யாக மண்டபத்திற்கு, பகவதி எனும் பெயர் சூட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று
ஆலயத்திற்கு அர்பணிக்கப்படும்
மாலை: 5.00 மணிக்கு- இசைக்கலைஞர்களின் மேள தாள பரவசம்

முதல் கால பூஜை

மாலை: 6.00 மணிக்கு- விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி, ப்ரவேச பலி, ம்ருத்சங்க்ரஹணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், யாக சாலை
ப்ரவேசம்
இரவு: 7.30 மணிக்கு- முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, ப்ரசாதம் வழங்குதல்

11.5.2016 (புதன்கிழமை) இரண்டாம் கால பூஜை

காலை: 9.00 மணிக்கு- விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், விசேஷசந்தி
காலை: 10.30 மணிக்கு- இரண்டாம் காலயாக பூஜை, ஷண்ணவதிஹோமம்
காலை: 11.30 மணிக்கு- பூர்ணாஹூதி, தீபாராதனை, ப்ரசாதம் வழங்குதல்

மூன்றாம் கால பூஜை

மாலை: 6.00 மணிக்கு- விக்னேஸ்வர பூஜை, மூன்றாம் கால யாக பூஜை
புண்யாஹவாசனம், விசேஷசந்தி, த்ரவ்யாஹூதி
இரவு: 8.00 மணிக்கு- பூர்ணாஹூதி, தீபாராதனை, ப்ரசாதம் வழங்குதல்

12.5.2016 (வியாழக்கிழமை) நான்காம் கால பூஜை

காலை: 6.30 மணிக்கு- விக்னேஸ்வர பூஜை, கஜ பூஜை, புண்யாஹவாசனம்
காலை: 7.30 மணிக்கு- நான்காம் கால பூஜை, தத்வார்ச்சனை, ஸ்பர்சாஹூதி
காலை: 8.30 மணிக்கு- மஹா பூர்ணாஹூதி, மஹா தீபாராதனை
காலை: 9.00 மணிக்கு- கடம் புறப்பாடு
காலை: 9.30 மணிக்கு- ஞான தக்ஷிணாமூர்த்திக்கு மஹா கும்பாபிஷேகம்
காலை: 10.00 மணிக்கு- பைரவ யாக மண்டபத்திற்கு கும்பாபிஷேகம்
காலை: 11.00 மணிக்கு- அலங்கார தீபாராதனை, ப்ரசாதம் வழங்குதல்
மதியம்: 12.00 மணிக்கு- அன்னதானம்

தொடர்புக்கு: 99403 92913.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !