உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரோகரா கோஷத்துடன் காவடி ஊர்வலம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பரவசம்

அரோகரா கோஷத்துடன் காவடி ஊர்வலம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பரவசம்

மஞ்சூர்: அரோகரா கோஷம் முழங்க, அன்னமலை முருகன் கோவிலில் நடந்த, காவடி பெருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று காவடி எடுத்தனர். மஞ்சூர் அடுத்துள்ள அன்னமலை முருகன் கோவி லில், 39வது காவடி திருவிழாவையொட்டி, நேற்று காலை 8:30 மணியளவில் விரதம் இருந்த பெண்கள் உட்பட, 500க்கும் மேற்பட்டவர்கள் கோவில் வளாகத்திலிருந்து காவடி எடுத்தனர். நிகழ்ச்சியை கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி துவக்கி வைத்தார். அன்னமலை கோவிலில் புறப்பட்ட காவடி ஊர்வலம் ஓணிக்கண்டி, கீழ்குந்தா, கொட்டரக்கண்டி, மஞ்சூர்பஜார், குந்தா மேல்முகாம், மட்டக்கண்டி வழியாக கோவில் வளாகத்தை வந்தடைந்தது. அரோகரா கோஷம் முழங்க, பால் காவடி, பன்னீர் காவடி உட்பட 12 வகையான காவடிகளை ஏந்தி வந்த முருக பக்தர்களுக்கு வழிநெடுகெங்கிலும் பூஜை நடந்தது. பின்பு, ஆன்மிக சொற்பொழிவு, முருக பக்தர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. அண்டை மாநிலமான கேரள, கர்நாடகா மாநிலத்திலிருந்து வந்த, ஏராளமான முருக பக்தர்கள் காவடி பெருவிழாவில் கலந்துகொண்டனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !