உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நட்டாற்றீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

நட்டாற்றீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

மொடக்குறிச்சி: காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். மொடக்குறிச்சி அருகே காங்கேயம்பாளையத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. இது அகத்தியம் வழிபட்ட தலமாகும். இங்கு சித்திரை திருவிழா விமர்சையாக நடக்கும். சித்திரை முதல் நாளான நேற்று, உள்ளூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சாரை சாரையாக பக்தர்கள் வந்தனர். கோவில் வளாகத்தில் பல்வேறு கடைகள் வைக்கப்பட்டிருந்தன. மொடக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !