வால்பாறை ஐயப்பன் கோவில் நிர்வாகிகள் தேர்வு
ADDED :3508 days ago
வால்பாறை : வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்பன் கோவிலில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கோவில் தலைவராக கிருஷ்ணாஸ்சுதீர், செயலாளராக நடராஜ், பொருளாளராக சண்முகம், துணைத் தலைவராக பட்டுராஜா, துணை செயலாளராக ரவி தேர்வு செய்யப்பட்டனர். விழா கமிட்டியின் தலைவராக மனோகரன், துணைத் தலைவராக பிரசன்னா, செயலாளராக நாகராஜ், துணைத் தலைவராக காயத்ரி ராஜன், பொருளாளர்களாக ராஜா, பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.