உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம் கோலாகலம்!

பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம் கோலாகலம்!

புதுச்சேரி: பஞ்சவடீ  ஆஞ்ஜநேயர் கோவிலில், ராம நவமியை முன்னிட்டு, சிறப்பு பாலாபிஷேகம் மற்றும்  சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் ÷ நற்று நடந்தது. திண்டிவனம்–புதுச்சேரி நெடுஞ்சாலையில்,  பஞ்சவடீயில், 36 அடி உயர  விஸ்வரூப  ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி   கோவில் உள்ளது. இங்கு, ராமநவமி உற்சவம்,  கடந்த 12ம் தேதி துவங்கியது.  தொடர்ந்து,  தினமும்  சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்  நடந்து வருகிறது. முக்கிய விழாவான, ராமநவமி  உற்சவம் நேற்று நடந்தது. காலை 6:00   மணிக்கு,   கோ பூஜையுடன் விழா துவங்கியது.  7:00  மணிக்கு, யாகசாலை பூஜை,  7:15   மணிக்கு, பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி மற்றும் அனைத்து   பரிவாரங்களுக்கும்  பாலாபிஷேகம், திரு மஞ்சனம் நடந்தது.

காலை 8:30 மணிக்கு,  ராம சொர்ண பாதுகைக்கும், பட்டாபிஷேக    ஸ்ரீராமர், சீதை, லஷ்மணர் சுவாமிகளுக்கும், 36 அடி உயர மூலவர் பஞ்சமுக     ஆஞ்ஜநேய சுவாமிக்கும் 1000 லிட்டர் பால் மற்றும்,   கான்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட விசேஷ  பன்னீர்  உள்ளிட்ட வாசனை திரவியங்களால்  சிறப்பு  திருமஞ்சனம் நடந்தது. விழாவையொட்டி, ரேவதி கிருஷ்ணா குழுவினரின் வீணை  பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. பகல் 12:00  மணிக்கு, ஸ்ரீராமர் மற்றும் ஆஞ்ஜநேய சுவாமிக்கு    விசேஷ சங்கல்பம் செய்து அர்ச்சனை, சோடச உபசாரம், திருவாராதனம்    சாற்றுமுறை செய் யப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு,  சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை,  பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட்  நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !