உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி பகுதியில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை!

பொள்ளாச்சி பகுதியில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில், தமிழ்புத்தாண்டு பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை  ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அபிேஷகம்,  வெட்டி வேர் மாலை மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்கார பூஜையும் நடந்தது. முக்கனிகள் படைக்கப்பட்டது.  பொள்ளாச்சி பாலக்காடு ரோடு  லட்சுமி நரசிம்மர் கோவிலில், கனகாபிேஷகம் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, விஸ்வரூப தரிசனம், கோமாதா பூஜை, 16 வகையான திரு மஞ்சன அபி ேஷகம் உள்ளிட்ட பூஜைகளும்; கனகாபிேஷகமும் இடம்பெற்றன.பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும்  சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !