திருவந்திபுரம் தேரோட்டத்திற்கான ஆயத்தப் பணி தீவிரம்!
ADDED :3506 days ago
கடலுார்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேரோட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடலுார் அடுத்த திரு வந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாக பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் 10 நாள் சித்திரை பிரம்÷ மாற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் வரும் 21ம் தேதி காலை 5:30 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளது. அதனையொட்டி தேரை சீரமைத்து சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.