உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் கோதண்டராமர் கோவிலில் லட்சதீப விழா

நெல்லிக்குப்பம் கோதண்டராமர் கோவிலில் லட்சதீப விழா

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் கோதண்டராமர் சுவாமி கோவிலில் லட்சதீப விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 13ம்  தேதி மாலை திருமூலர் யோகா மையம் பழனிவேலு குழுவினரின் யோகா நிகழ்ச்சியும் ஆன்மிக பட்டிமன்றமும் நடந்தது.  14ம் தேதி காலை சிறப்பு  திருமஞ்சனமும் சுவாமி வீதியுலாவும் நடந்தது. மாலை லட்சதீப விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து அபிநயா  நாட்டியக் குழு மாணவியர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. சபரிகிரீசன் அன்னதான அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.  இதே போன்று, பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. ஆஞ்சநேயர்  வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஓசூரம்மன் கோவிலில் வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். ரமணர் அன்னதான குழுவினர் அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !