உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் வரும் 21ல் சித்ரா பவுர்ணமி தேரோட்டம்

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் வரும் 21ல் சித்ரா பவுர்ணமி தேரோட்டம்

உத்தமசோழபுரம்: உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், வரும், 21ம் தேதி, சித்ரா பவுர்ணமி தேரோட்டம் நடைபெற உள்ளது. சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், தேரோட்டத்துக்காக, சில ஆண்டுகளுக்கு முன், புதிதாக செய்யப்பட்ட தேர் பழுதுபார்க்கப்பட்டு, தற்போது வார்னிஷ் அடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தேரில் துணிகள் போர்த்த இரும்பு குழாய்களால், சாரம் கட்டும் பணிகளும் நடக்கின்றன. சித்ரா பவுர்ணமி தேரோட்ட விழாவை ஒட்டி, வரும், 18ம் தேதி மாலை, வாஸ்து சாந்தி பூஜை நடக்கிறது. 19ம் தேதி காலை, 10.30 மணிக்கு, தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, மாலையில் பிரதோஷ வழிபாடு நடக்கும். 20ம் தேதி காலை, பிச்சாண்டார் திருக்கோலமும், மாலையில் பெரியநாயகி சமேத கரபுரநாதர் மற்றும் வள்ளி தெய்வானை முருகனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இதையடுத்து, 21ம் தேதி காலை, கோவிலை சுற்றியுள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்க உள்ளன. மாலை, 6 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கும். மேலும், 22ல், நடராஜர் தரிசனம், 23ம் தேதி இரவு, தேர்த்திருவிழா சத்தாபரணம், 24ல், மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் விழா நிறைவடையும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !