சுகவனேஸ்வரர் கோவிலில் ரூ.6.91 லட்சம் காணிக்கை
ADDED :3505 days ago
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உண்டியலில், 6.91 லட்சம் ரூபாயும், 63 கிராம் தங்கமும் காணிக்கையாக கிடைத்தது. சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள எட்டு உண்டியல்கள், கடந்த, டிச.,9ம் தேதி திறக்கப்பட்டிருந்தது. தற்போது, 4 மாதங்களுக்கு பின், அந்த உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உதவி ஆணையர் ரமேஷ், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணன், ஆய்வாளர் மகாவிஷ்ணு ஆகியோர் முன்னிலையில், தன்னார்வலர்கள், காணிக்கையை எண்ணினர். அதில், 6.91 லட்சம் ரூபாய், 63 கிராம் தங்கம், 159 கிராம் வெள்ளி இருந்தது.