உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராம நவமியை முன்னிட்டு சீதா - ராமர் திருக்கல்யாணம்

ராம நவமியை முன்னிட்டு சீதா - ராமர் திருக்கல்யாணம்

காரிமங்கலம்: தர்மபுரியை அடுத்த, காரிமங்கலம் அக்ரஹாரம் ராமர் கோவிலில், ராம நவமி விழா நேற்று துவங்கியது. இதேபோல், தர்மபுரி எஸ்.வி., சாலை ஆஞ்சநேயர் கோவிலில், பூஜைகள் நடந்தன. காலை, 9 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் மாதவாச்சாரி திருமண மண்டபத்தில் சீதாராமர் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து மதியம், 12 மணிக்கு பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது.

*தர்மபுரி கீழ்தெரு தாஸ்ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகமும் தொடர்ந்து, வாசவி திருமண மண்டபத்தில் சுவாமி திருக்கல்யாண வைபோகம் நடந்தது. பாலக்கோடு ராமமந்திரத்தில், சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை சீதா ராமர் கல்யாணமும், சீதாராமர் பட்டாபி?ஷகம் வரும், 24ம் தேதி நடக்கிறது. இதே போல் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள ராமர் கோவில்களில் ராம நவமி கொண்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !