பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலில் வரும் 21ல் சித்திரை தேர்த்திருவிழா
ADDED :3505 days ago
கோபி: கோபி தாலுகா, பாரியூரில் கொண்டத்து காளியம்மன் வகையறா கோவில்கள் உள்ளன. இவற்றில் அமரபணீஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, 21ல் நடக்கிறது. இதையொட்டி, 18ம் தேதி மாலை, 5 மணிக்கு தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. 19ல் வாஸ்து சாந்தி நடக்கிறது. 20ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றம், அஷ்டபலி, சுவாமி புறப்பாடு நடக்கிறது. அன்று இரவு, 7 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 21ம் தேதி மாலை, 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மஞ்சள் நீராட்டம், 22ம் தேதி நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், உதவி கமிஷனர் முருகையா செய்து வருகின்றனர்.