குன்னுார் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :3505 days ago
குன்னுார் : குன்னுார் காட்டேரி டேம் செலவிப்நகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், 21வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் கரக ஊர்வலம் நடந்தது. இன்று காலை,11:30 மணிக்கு அலங்கார பூஜை, மாலை,4:30 மணிக்கு மாவிளக்கு பூஜை, நாளை மதியம்,1:00 மணிக்கு பூகுண்டம்,மாலை, 3:00 மணிக்கு தேர் ஊர்வலம் நடக்கிறது . விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.