உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டிசைன் சேலை பரிசு!

டிசைன் சேலை பரிசு!

உயிர்களின் புண்ணிய, பாவ கணக்குகளை பதிவேட்டில் எழுதுபவர் சித்ரகுப்தர். எமதர்மனின் உதவியாளரான இவர் சித்ரா பவுர்ணமியில் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, திருவிளக்கில் சித்திரகுப்தர் இருப்பதாகக் கருதி (ஆவாஹனம் செய்தல்) மலர்களால் பூஜிக்க வேண்டும். பானகம், நீர் மோர், வெல்லம் சேர்த்த அவல் படைக்க வேண்டும். சித்திரகுப்தர் பசுவின் வயிற்றில் இருந்து அவதரித்தவர் என்றும் கருதப்படுவதால், சித்ரா பவுர்ணமி விரதமிருப்பவர்கள் உணவில் பால், தயிர், வெண்ணெய், நெய் ஆகியவற்றை சேர்ப்பதில்லை. உப்பையும் குறைப்பது நல்லது. இதன் மூலம் ஆரோக்கியம், செல்வவளம், நிறைந்த புகழ் உண்டாகும். இந்த நாளில் ஏழைப் பெண்களுக்கு சித்திர வேலைப்பாடு (பல டிசைன்) கொண்ட புடவை தானம் அளித்தால் புண்ணியம் சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !