உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மறுபிறப்பு ஏற்படாமல் இருக்க இந்தப் பிறவியில் என்ன செய்ய வேண்டும்?

மறுபிறப்பு ஏற்படாமல் இருக்க இந்தப் பிறவியில் என்ன செய்ய வேண்டும்?

நமது உயிரை ஆன்மா என்பர். இதனுடன் ஆசை சம்பந்தப்பட்ட விஷயங்கள் இணைந்தேயிருக்கும். இந்த ஆசையை (வினை) ஒரு நோயாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. எத்தனை பிறவி எடுத்தாலும் நமது உயிரை விட்டு அகலாமல் கூடவே ஆசையும் இணைந்தே பிறக்கும். இந்த இணைப்பு எப்பொழுது நீக்கப்படுகிறதோ அது முதல் பிறவி நீங்கி விடும். இறைவன் திருவடிகளில் கலந்து விட்டால்  மோட்சம் கிடைக்கும். ஆசை நீங்க ஒன்று இறைவனிடம் பூரண சரணாகதி அடைந்து வழிபடவேண்டும். மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். இப்படியெல்லாம் செய்வது எளிதான ஒன்றல்ல. சாதித்தால் மறுபிறவி உண்டாகாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !