உழைப்பைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்டுள்ள கருத்து!
ADDED :3860 days ago
*வேலை செய்ய விரும்பாதவன் சாப்பிடவும் விரும்பாதிருக்கட்டும்.
*உழைப்பாளி அவமானப்படத் தேவையில்லை.
*உண்மையில் அறுவடை செய்ய வேண்டியதோ ஏராளமாயிருக்கிறது. ஆனால், வேலையாட்களோ வெகுசிலர் தான் இருக்கிறார்கள். (பணிகள் ஏராளமாக இருந்தும் யாரும் வேலை செய்ய விரும்புவதில்லை என்பது இதன் பொருள்)
*உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக.
*உழைக்கும் குடியானவனே விளைச்சல் கனிகளில் முதல்பங்கு பெற வேண்டும்.
*போரடிக்கிற மாட்டிற்கு வாயைக் கட்டாதே. (உழைப்பவர்க்கு சரியான கூலியைக் கொடு என்று அர்த்தம்)
*உழைப்பாளி தன் வெகுமதிக்கு தகுதியானவனாகிறான்.