உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறு விழாக்களும் கொடியேற்றம்!

ஆறு விழாக்களும் கொடியேற்றம்!

பெரும்பாலான கோவில்களில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பிரம்மோற்ஸவம் என்னும் பெரிய திருவிழா நடக்கும். ஆனால் மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதமும் பெரிய திருவிழா நடக்கிறது. சித்திரை பிரம்மோற்ஸவம், ஆடி முளைக் கொட்டு உற்சவம், ஆவணி பிட்டுத்திருவிழா, கார்த்திகை தீபத்திருவிழா, தை தெப்பம், மாசி மண்டல உற்சவம் என ஆறு விழாக்களுக்கு கொடியேற்றப்படுகிறது. இதில் முளைக்கொட்டு விழா அம்பாளுக்குரியது என்பதால் இதற்கு மட்டும் அம்பாள் சன்னிதி முன்பு கொடியேற்றம் நடக்கிறது. வைகாசி வசந்த உற்சவம், ஆனி ஊஞ்சல் உற்சவம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கோலாட்டம், மார்கழியில் மாணிக்கவாசகர் உற்சவம், அம்பாளுக்கு எண்ணெய் காப்பு விழா மற்றும் பங்குனி பவித்ரோத்ஸவம் ஆகிய ஆறு விழாக்களுக்கு காப்பு கட்டி விழா துவங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !