உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சிக்கு மூன்று மார்புகள் ஏன்?

மீனாட்சிக்கு மூன்று மார்புகள் ஏன்?

மலையத்துவஜன் மகளாகப் பிறந்து பட்டத்தரசியான மீனாட்சி, ஒரே குடையின் கீழ்உலகத்தைக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டாள். சாதாரண அரசர்களே தங்களைச் சுற்றியுள்ள நாடுகளை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடும் போது, சர்வலோக நாயகியான மீனாட்சி, மூவுலகங்களையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வர முயற்சித்ததில் வியப்பேதும் இல்லையே! அவள் என்ன சாதாரண ராஜாக்களைப் போல் நாடுபிடித்து, தான் சம்பாதிக்கவா போருக்கு சென்றாள்? உலக உயிர்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் அவர்களின் ஆணவத்தை அடக்கி நெறிப்படுத்தவே திக்விஜயம் சென்றாள். இந்த உலகம் தன்னுடையது என்பது போல் ஆட்டம் போடும் ஆணவக்காரர்களின் கொட்டத்தையும் அடக்க சென்றாள். மீனாட்சியம்மை பிறந்தபோது அவளுக்கு மூன்று மார்புகள் இருந்தன. பெற்றவர்கள் வருத்தம் அடைந்தனர். இயல்புக்கு மாறாக பிறந்துள்ள இவளை யார் திருமணம் செய்வார்கள் என்று யோசித்தார்கள். ஆனால் அம்பிகையோ காரிய காரணத்துடன் தனக்கு மூன்று தனங்களை வருவித்துக் கொண்டாள். சிவனுக்கு மூன்று கண்களாயிற்றே! அது ஒரு காரணம். அவர் வழக்கமான கண்களுடன் நெற்றியிலுள்ள கண்ணாலும் ஜீவன்களை கண்காணிக்கிறார். கோபம் வரும் போது வெப்பத்தை உமிழ்கிறார். இதனால் ஜீவன்கள் நடுங்குகின்றன. தந்தை கண்டிப்புக்காரராக இருந்தாலும், தாயார் அனுசரணையாக இருப்பாள் அல்லவா? அப்படி தந்தையின் கண்டிப்பில் தவிக்கும் உயிர்களை அம்பிகை முப்பால் ஊட்டி தாலாட்டுகிறாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !