உலகின் முதல் இன்ஜினியர்!
ADDED :3860 days ago
ஒரு கட்டடமோ, வீடோ அமைக்க வேண்டுமெனில் அவை எப்படி அமைய வேண்டுமென இன்ஜினியர் வரைபடம் போட்டுத் தருவார். மதுரை நகரம் உருவாவதற்கு வரைபடம் போட்டுக் கொடுத்தவர் யார் தெரியுமா? சொக்கநாதரே தான்! அவரே உலகின் முதல் இன்ஜினியர். குலசேகர பாண்டிய மன்னன், சொக்கநாதர் கோவிலைச் சுற்றி நகரம் அமைக்க எண்ணியபோது, எப்படி அமைப்பது எனத் தெரியவில்லை. குழம்பிய மன்னன் தீர்வு வேண்டி சொக்கநாதரை வேண்டினான். அப்போது சித்தர் வடிவில் மன்னரிடம் வந்த சொக்கநாதர், கோவிலை தாமரை மொட்டாகவும், அதைச் சுற்றி அமையும் வீதிகளை இதழ்களாகவும் கருதி நகர் அமைக்கும்படி கூறினார். இவ்வாறு மதுரை நகரம் எவ்வாறு அமைய வேண்டுமென்று வரைபடம் போட்ட சொக்கநாதர் நம் வாழ்க்கைப் பாதைக்கும் வரைபடம் போட்டுத் தருவார் என்பதில் சந்தேகமில்லை.