உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

*ஆனி பவுர்ணமியன்று மீனாட்சி அம்மனுக்கு உச்சிக்கால (மதியம்) பூஜையில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் அபிஷேகம் செய்கின்றனர்.
*மீனாட்சியின் வைர மூக்குத்தி தரிசனம் மிகவும் விசேஷமானது. இவளை வைர கிரீடம் அணிந்த அலங்காரத்தில் சித்திரைப்பிறப்பு, ஆங்கிலப்புத்தாண்டு, தை அமாவாசை ஆகிய நாட்களில் தரிசிக்கலாம்.
*மீனாட்சி சன்னிதி எதிரிலுள்ள கோபுரம் அதிக சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்ததால் சித்திர கோபுரம் என்ற பெயர் உண்டு. இக்கோபுரத்திலுள்ள 25 முகம் கொண்ட சிவன் (சதாசிவம்) சிற்பம் அற்புதமானது. இதனை மேற்கு கரையிலுள்ள துலாபார தூண் அருகில் நின்று பார்க்கலாம்.
*பொற்றாமரைக்குளத்தின் வடக்கு கரையில் உள்ள தூண்களில் மதுரை நகரை நிர்மாணித்த குலசேகர பாண்டியன் மற்றும் தனஞ்செயன் என்ற வணிகரின் சிலைகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !