உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதினாறு செல்வமும் தரும் விநாயகர்கள்!

பதினாறு செல்வமும் தரும் விநாயகர்கள்!

மீனாட்சிஅம்மன் கோயிலைச் சுற்றி 16 விநாயகர்கள் இருக்கின்றனர். இவர்களிடம் வேண்டிக் கொள்ள பதினாறு செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பர். திருநீறு விநாயகர், முக்குறுணி விநாயகர், திருமலை விநாயகர் (அம்பாள் சன்னதி முன்மண்டபம்), கூத்து விநாயகர் (அம்பாள் சன்னிதி இரண்டாம் பிரகாரத்தில் உள்ள இரட்டை விநாயகர்), மேற்கு ஆடி வீதியிலுள்ள சுந்தர விநாயகர், இம்மையிலும் நன்மை தரும் விநாயகர், கிழக்கு ஆடி வீதியில் வன்னி விநாயகர் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். பொற்றாமரைக் குளத்தின் மேற்கு கரையில் கிளிக்கூட்டு மண்டபத்திலுள்ள சித்தி விநாயகர் தான் இந்தக் கோவிலின் ஸ்தல விநாயகர் ஆவார், இந்த சன்னிதியை விநாயகருக்கான அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !