உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேர்ந்து வாழ ஒரு சன்னிதி!

சேர்ந்து வாழ ஒரு சன்னிதி!

மீனாட்சியம்மன் கோவிலில் மகாவிஷ்ணு, சிவனுக்கு பார்வதியை  தாரை வார்த்துக் கொடுக்கும் (திருமணம் செய்து வைக்கும்) கல்யாண சுந்தரர் சன்னிதி, சுவாமி சன்னிதியின் இரண்டாவது வடக்கு பிரகாரத்தில் உள்ளது. இந்த சன்னிதியின் முன் மண்டபத்திலுள்ள தூண்களில் சொக்கநாதர், திக்விஜயம் செல்லும் கோலத்தில் மீனாட்சி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், சரபேஸ்வரர், நரசிம்மர் மற்றும் அஷ்டலட்சுமி சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் அது நீங்கவும், புதிதாக திருமணம் ஆனவர்கள் இணை பிரியாமல் வாழவும் இவரை வணங்கி வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !